Sunday, November 25, 2012


நான் வரைந்த இச்சிறுகதையானது அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்தது.


kaf;fk;

 ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் ' மாப்பிள்ளை வந்திட்டார்'. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில்.ஆரத்தியெடுக்கத் தயாரானவா்களையும் அவா்கள் விட்டபாடில்லை. ஒருவாறாக மாப்பிள்ளை மண்டபத்தின் வாயிலை அடைந்துவிட்டார். மூன்றுமுறை ஆரத்தி எடுப்பது இந்துக்களின் பண்பாடு. முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதியாக ஆரத்தித்தட்டத்தை சுற்றும் போது மாப்பிள்ளை தலை சுற்றி தரைமேல்.

மணப்பெண்ணின் தாயார் தன் மகளின் வாழ்க்கையே தொலைந்து விட்டது என எண்ணி பலத்த ஓலமிட்டார். திருமணத்தைக் காண வந்தோர் ஈ மொய்ப்பது போல மாப்பிள்ளையை மொய்க்கத்தொடங்கினா். அங்கிருந்த புத்திஜீவிகள் சிலா் அனைவரையும் சற்று விலகும் படி கூறி ஒருவாறாக ஒரு ‘ lemon juice ' இன் உதவியுடன் மாப்பிள்ளையை எழ வைத்தனா்.

மீண்டும் சடங்குகள் சம்பிரதாயங்கள் களைகட்டத்தொடங்கின. தாலி கட்டும் படலமும் இனிதே நிறைவேறியது.

மாப்பிள்ளையின் மயக்கம் தொடர்பாக கூட்டத்திலிருந்தோர் பலவாறாக கவி பாடினா்.

‘ மாப்பிள்ளை Heart patient ஆம்'
'வருத்தக்காறப்பெடியன இந்தப்பிள்ளைக்கு கட்டிவச்சிருக்கினம்'

இன்னும் பல பல காரணங்கள்..................

மாப்பிள்ளை மயக்கம் போட்டு விழுந்ததற்கான உண்மையான காரணத்தை யாரும் சொன்னபாடில்லை. ஆகவே நான் சொல்கிறேன்.
திருமணநாளன்று மணமகனும் மணமகளும் விரதமிருந்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர் முதலாவதாக இருவரும் இணைந்து உணவருந்துவது தான் நமது சம்பிரதாயம்.

பாவம் மாப்பிள்ளை!!!!!!!! விரதத்தைப்பற்றி முன்னொருபோதும் அறியாதவா். திருமண வேலைகளை இரவிரவாக கண்விழித்துச் செய்திருக்கிறார். மறுநாள் அதிகாலையில் அவரை விறைக்கும் நீரில் குளிப்பாட்டியிருக்கின்றனா். வீடியோக்காரர்கள் படம் பிடிப்பதற்காகவே மிகவும் ஆறுதலாக மாப்பிள்ளைக்கு அபிசேகம் செய்திருக்கிறார்கள் பெரியோ்கள்.

காலைச்சாப்பாடு இல்லை, தலையில் தண்ணீா், போதிய நித்திரையில்லை. மாப்பிள்ளை மயக்கம் போட்டு விழுவார்தானே.

சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதவாழ்விற்கு அவசியமானவை. ஆனால் அவை மனிதனையே கட்டுப்படுத்துகின்றபோது விளைவுகள் விபரீதமாகலாம்.

All Rights Reserved © Saambavi Sivaji  

No comments:

Post a Comment